புதுக்கோட்டை, அக்.26: புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளக்கொள்ளை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நேற்று மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் எம் சாண்ட் ஏற்றுச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உதரவிட்டார்.
