×

மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் ஒரு பெண் பெயர் 6 முறை இடம்: தேர்தல் அதிகாரிகள் தகவல்

பால்கர்: மகாராஷ்டிராவில் பால்கரில் ஒரு பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் 6 முறை இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சுஷ்மா சஞ்சய் குப்தா என்ற அந்த பெண் நலசோபரா பகுதியில் வசித்து வருவதாகவும் அவரின் பெயர் பலமுறை இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தன. இது குறித்து பால்கர் மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் இந்து ராணி ஜாக்கர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: சுஷ்மா குப்தா பலமுறை விண்ணப்பித்ததன் காரணமாக அவரது பெயர் பல இடங்களில் பதிவானது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படிவம் எண் 6ல் விண்ணப்பித்த சுஷ்மா குப்தா, வாக்காளர் அடையாள அட்டை வர தாமதமானதால் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது பெயர் ஏற்கனவே பதிவாகி இருந்தது அவருக்கு தெரியவில்லை. இது தான் குழப்பத்திற்கு காரணம். தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டு, ஒரே இடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதே போல, பலமுறை இடம்பெற்றிருக்கும் பெயர்களை சரிபார்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதனிடையே வாக்காளர் பட்டியல் முறைகேட்டை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த வரும் திங்கட்கிழமை (நாளை) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக உத்தவ் சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே அறிவித்துள்ளார்.

Tags : Maharashtra ,Palghar ,Palghar, Maharashtra ,Sushma Sanjay Gupta ,Nalsopara ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...