×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 பேரின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்களது படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 9 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரச்னைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் மற்றும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத எழுத்தர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதனை ஊக்குவிக்கும் வண்ணம் இவர்களது சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிட தலா ரூ.1 லட்சம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.11.2025. விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும், உரிய படிவத்தில் தவறாமல் கைபேசி எண்ணிணை குறிப்பிட்டு உரிய காலத்திற்குள் ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : Adi Dravidian ,Chennai ,Commissioner ,Anand ,Adi Dravidian and ,Arts ,Adi Dravidian and Tribal Welfare Department ,
× RELATED பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி...