×

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு, அக்.26: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 31ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

Tags : Farmers Welfare Day ,Chengalpattu district ,Chengalpattu ,
× RELATED மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை