×

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க வேட்டையை நிகழ்த்திக் காட்டி, பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்கள் அபாரச் சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளை முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மேலும் நீங்கள் பெற்று வரும் வெற்றிகளால், விளையாட்டுத் துறையில் உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்து வருவது உறுதியாகி வருகிறது என முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தின் பாரா பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவுக்காக 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர்.

Tags : Tamil Nadu Para ,Badminton Championship ,Australia ,K. ,Stalin ,Chennai ,Nadu Para ,
× RELATED 1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம்...