×

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ‘கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023-24ல் தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25ல் 16 சதவீத வளர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிக்கு கட்டுமானத்துறை மிகுந்த உதவி செய்துள்ளது. மராட்டிய மாநிலத்தையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம். நாட்டின் சேவைத்துறையில் தமிழ்நாட்டு சேவைத்துறையின் பங்களிப்பு 11.3 சதவீதமாக உள்ளது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்னணு பொருட்களின் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது’ அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Stalin ,Minister Gold South Narasu ,Chennai ,K. Minister Gold South Narasu ,
× RELATED பாவங்கள் நீங்கும் நம்பிக்கையில்...