×

கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

காஞ்சிபுரம்: கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், காஞ்சிபுரம் மேட்டு தெருவில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகர திமுக அலுவலக கட்டிடம், கலைஞர் நூற்றாண்டு அரங்கம் மற்றும் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா இன்று காலை நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.காந்தி வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், க.செல்வம் எம்பி, எழிலரசன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர அவைத்தலைவர் கே.ஏ.செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம், ஜெகநாதன், நிர்மலா, பொருளாளர் சுப்பராயன், பகுதி செயலாளர்கள் கே.சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், சீனிவாசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர்கள் பி.எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தரவரதன், தொண்டரணி செயலாளர் சுகுமாரன், மாநில நெசவாளரணி அமைப்பாளர் தி.அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் சுகுமாரன், த.விஸ்வநாதன், மாமல்லன், ச.சுரேஷ், பி.சங்கர், ஜே.வரதராஜன், சுகுமாரன், பாலமுருகன், சேகர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் மலர்மன்னன் நன்றி கூறினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Kanchipuram ,Chief Minister MLA ,K. Stalin ,Kanchipuram Municipal Dimuka Office Building ,Artist Centennial Stadium ,Kanchipuram Mattu Street ,
× RELATED 2025 கடினமாக அமைந்தது; 2026 இதைவிட மோசமாக இருக்கும்: இத்தாலி பிரதமர் பேச்சு