நாகப்பட்டினம், அக்.25: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டதின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டதின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15ம் தேதி கடைசி தேதி ஆகும். எனவே நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளின் பங்குத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 557.23 செலுத்தி அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
