×

சிந்து நதியை இந்தியா நிறுத்தியதை போல் பாக்.கிற்கு செல்லும் நதியை நிறுத்தி ஆப்கன் அதிரடி: எல்லை மோதலை தொடர்ந்து நடவடிக்கை

காபூல்: காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. மேலும் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானுடன் மேற்கொண்டு இருந்த 65 ஆண்டுகால ஒப்பந்தத்தை இந்தியா முறித்தது. அதே போல் பாகிஸ்தானுக்கு செல்லும் குனார் நதியை நிறுத்தி ஆப்கன் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப்கன்-பாகிஸ்தான் எல்லை பிரச்னையை தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஆப்கன் மேற்கொண்டுள்ளது.

குனார் ஆற்றின் குறுக்கே விரைவில் அணைகள் கட்டுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லும் அனைத்து தண்ணீரையும் நிறுத்த ஆப்கன் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை போல் எல்லை பிரச்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த உத்தரவு ஆப்கனின் உச்சத் தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்ட்சாடாவிடமிருந்து வந்தது என்று தலிபான் அரசின் நீர்வளத்துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர் தெரிவித்தார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பதிவில்,‘ஆப்கானியர்கள் தங்கள் சொந்த தண்ணீரை நிர்வகிக்க உரிமை உண்டு. ஆப்கன் நதி மேல் நடக்கும் கட்டுமானம் வெளிநாட்டு நிறுவனங்களால் அல்ல, உள்நாட்டு நிறுவனங்களால் வழிநடத்தப்படும்’ என்றார்.

இந்த மாதம் காபூல் மீது பாகிஸ்தான் தாக்கியது, எல்லையில் நடந்த போர், ஆப்கனில் இருந்து செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பை பயங்கரவாதக் குழுவாக முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை ஆப்கன் மேற்கொண்டுள்ளது. இதற்காக குனார் நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பு அந்த பகுதியில் பல்வேறு அணைகளைக் கட்டி நீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குனார் நதி பாகிஸ்தானுக்குள் பாயும் அனைத்து பகுதியும் வறண்டு போய் விடும். குனார் நதி நீர் பங்கீடு தொடர்பாக ஆப்கன், பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லாததால் பாகிஸ்தான் விழிபிதுங்கிய நிலையில் உள்ளது.

Tags : India ,Indus River ,Pakistan ,Kabul ,Kashmir ,Pahalgam ,Operation Sindh ,Pakistan… ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...