- உலக கடல்சார் உச்சி மாநாடு
- மும்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- இந்திய கடல்சார் வாரம்
சென்னை: மும்பையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள இந்திய கடல்சார் வாரம் மற்றும் உலக கடல்சார் உச்சி மாநாட்டில் தமிழ்நாடு அரசு பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கடல்சார் நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். உலகளாவிய கடல்சார் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன், புதிய தொழில்நுட்ப புதுமைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நவீன கொள்கைகள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் சார்பில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தொழில்துறை அமைச்சர், கடல்சார் வாரியம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளனர். இக்குழு தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகம், தொழில், நீலப்பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியை முன்னெடுத்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் வணிக அமர்வுகள் நடத்த உள்ளது. தமிழ்நாட்டின் கடல்சார் திறன்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பண்டைய கடல்வழி மரபு அனைத்தும், ஒருங்கிணைந்து மாநாட்டில் வெளிப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
