சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் எழிலூட்டி புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக கலைஞரால் உருவாக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவுக்கு மேலும் எழிலூட்டி புதுப்பித்திருக்கிறது நமது திராவிட மாடல் அரசு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் இத்தகைய பசும் போர்வைகளால் சென்னையை அலங்கரிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
