சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த செனட் கூட்டம் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் சாதாரண கூட்டம் அக்டோபர் 25ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. புதிய தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
