×

மழை பாதிப்புகளை உடனுக்குடன் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் தாசில்தார் அறிவுறுத்தல்

தண்டராம்பட்டு, அக்.25: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் துரைராஜ் தலைமையில், மண்டல துணை தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மழை பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் கட்டுபவர்கள் விரைந்து முடிப்பதற்கு அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்கள் வருமானம், இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட பிற சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதை விசாரணை செய்து பதில் அளிக்க வேண்டும் என தாசில்தார் அறிவுறுத்தினார்.

Tags : Tahsildar ,Thandarambattu ,Thandarambattu taluka ,Tahsildar Durairaj ,Zonal ,Social Security Scheme Tahsildar ,Revenue Inspectors ,Administrative Officers ,Stalin ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...