×

பனை விதை நடும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவு

தண்டராம்பட்டு, அக்.25: தண்டராம்பட்டு ஊராட்சி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று பிடிஒ அலுவலகத்தில் நடந்தது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். பிடிஓ ரவீந்திரன்நாதன் தலைமை பேசுகையில், ‘ஒரு ஊராட்சியில் ஆயிரம் பனை விதை நட வேண்டும். அதனை ஆன்லைனில் போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது மழையை சமாளிப்பதற்காக ஊராட்சியில் தண்ணீர் டேங்குகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள ஊராட்சிகளில் எந்நேரத்திலும் ஆற்றில் வெள்ளம் வந்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என கூறினார்.

Tags : Panchayat ,Thandarambattu ,PDO ,Thandarambattu Panchayat Union ,Development ,
× RELATED ஏழை ஜோடிக்கு 4 கிராம் தங்கம்,...