- தஞ்சாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- தஞ்சாவூர்
- பட்டுக்கோட்டை
- மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி
- பெரியசாமி
- மனோரா சின்னமனை
- தஞ்சாவூர் மாவட்டம்
- விஷ்ணு
- மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி…
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை, மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மர்மமான முறையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா சின்னமனையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மகன் விஷ்ணு வயது (20). இவர் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு. இந்த வருடம் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், தீபாவளிக்கு விடுமுறைக்கு வந்த விஷ்ணு நேற்று மீண்டும் மதுரை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இன்று காலையில் அவர் பள்ளி படிப்பை முடித்த மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பற்றி தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஷ்ணு உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
