×

கூடலூர் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி செய்துதர கோரிக்கை

கூடலூர்,அக்.24: கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் வயதான மற்றும் பெண் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூடலூர் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தின் உள்ளே நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி செல்கின்றன. பயணிகள் அமர்வதற்கு இடவசதி இருந்தும், போதிய இருக்கைகள் இல்லாதது சிரமத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணிகள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தொடர் விடுமுறை காலங்கள் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் வருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் அமர்ந்திருக்கும் வகையில் போதிய இருக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Gudalur ,Gudalur State Transport Corporation ,
× RELATED ஊட்டியில் பனிக்கால கவியரங்கம்