×

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட பிரபல ரவுடி கைது

திருச்சி, அக். 24: திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே நின்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி, திருவெறும்பூர், பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(48). இவர் கடந்த 21ம் தேதி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இவரிடம் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே அந்த மர்ம நபர் ராமகிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் குறித்த விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கத்தியை காட்டி மிரட்டிய, கீழ சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மயில் தினேஷ்(25) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சரித்திர பதிவேடு ரவுடியான மயில் தினேஷை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Trichy ,Chattiram ,Ramakrishnan ,Papakurichi Road, Thiruverumpur, Trichy ,
× RELATED சோமரசம்பேட்டையில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரை