- நாகப்பட்டினம் அரசு கலைக் கல்லூரி
- நாகப்பட்டினம்
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நாகப்பட்டினம், அக்.24: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. இதில் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கட்டுரைப்போட்டியில் எழிலரசி முதலிடம் பிடித்து ரூ. 10 ஆயிரம் பரிசும் சான்றிதழும் பெற்றார். கவிதை போட்டியில் ரம்யா ஸ்ரீ இரண்டாம் இடம் பெற்று ரூ.7 ஆயிரம் பரிசும் சான்றிதழும் பெற்றார். வெற்றிபெற்ற மாணவிகளை அரசு கல்லூரி முதல்வர் அஜிதா பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். விழாவின்போது கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் சிவக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசுவரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
