×

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் பிரதமர் மோடியிடம் மீண்டும் பேசினேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த சில நாட்களாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று கூறி வருகின்றார். பிரதமர் மோடி எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறி வருகின்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ‘‘உங்களுக்கு தெரியும். இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக என்னிடம் கூறியது. இது ஒரு செயல்முறை. உடனடியாக நிறுத்த முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் கிட்டத்தட்ட 40 சதவீதமாக குறைத்துவிடுவார்கள். நேற்று கூட பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் மிகவும் சிறப்பானவர். சீனாவையும் அவ்வாறு செய்வதற்கு வற்புறுத்த முயற்சிக்கிறேன்” என்றார்.

Tags : India ,Russia ,Modi ,President Trump ,Washington ,US ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...