- பிஆர் காவாய்
- சூர்யகாந்த்
- யூனியன் அரசு
- புது தில்லி
- உச்ச நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- தலைமை நீதிபதி
- இந்தியா
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23 அன்று ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியை நியமிக்கும் நடைமுறைகளை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூத்த நீதிபதியான சூர்யகாந்த் பெயரை, அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்வார். இந்த கடிதம் இன்றுக்குள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த கடிதம் கிடைத்ததும், புதிய தலைமை நீதிபதிக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும்.
அதை ஏற்று ஜனாதிபதி அறிவிப்பு வெளியிடுவார். வழக்கமான நடைமுறையின்படி தற்போதைய தலைமை நீதிபதி 65 வயதை எட்டும்போது, ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். அந்த நடைமுறை அடிப்படையில் இப்போது புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரியானா மாநிலத்தை சேர்ந்த நீதிபதி சூர்யகாந்த் 2027 பிப்.9 அன்று ஓய்வு பெறுவார். கிட்டத்தட்ட 15 மாதங்கள் தலைமை நீதிபதியாக அவர் பதவி வகிப்பார்.
