×

இந்திய வம்சாவளி வரலாற்று ஆசிரியருக்கு பிரிட்டன் புத்தக விருது

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சுனில் அம்ரித் எழுதிய புத்தகத்துக்கு பிரிட்டிஷ் அகாடமியின் புத்தக பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் சுனில் அம்ரித் தென்னிந்திய பெற்றோருக்கு கென்யாவில் பிறந்தவர். சிங்கப்பூரில் வளர்ந்த இவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக இருக்கிறார். இவர் சமீபத்தில் எரியும் பூமி: கடந்த 500 ஆண்டுகளின் சுற்றுச்சூழல் வரலாறு என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்த புத்தகம் இந்த ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமியின் உலகின் சிறந்த புனைகதை அல்லாத படைப்புக்களுக்கான மதிப்புமிக்க ரூ.30 லட்சம் மதிப்புள்ள புத்தக பரிசை வென்றுள்ளது.

 

Tags : London ,Sunil Amrit ,Kenya ,Singapore ,University of… ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்