×

2வது டெஸ்ட்டில் அபாரம்: 18 ஆண்டுகளில் முதல் வெற்றி பாக்.கில் தெ.ஆப்ரிக்கா சாதனை

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சென்று உள்ள தென் ஆப்ரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 333 ரன்னில் ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முத்துசாமி 89, ஸ்டப்ஸ் 76, ரபாடா 71 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2வது இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் சைமன் ஹர்மர் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் தென் ஆப்ரிக்காவுக்கு 72 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன் எடுத்து வெற்றி பெற்றார். இதன் மூலம் 18 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக பாகிஸ்தான் மண்ணில் தென் ஆப்ரிக்கா அணி முதல் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனையை படைத்து உள்ளது. மேலும், டெஸ்ட் தொடரை 1-1 என்ற சமன் செய்தது.

Tags : South Africa ,Pakistan ,Rawalpindi ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!