* வரும் 27ம் தேதி தொடங்கும் சென்னை ஓபன் டென்னில் போட்டியில் வைல்டு கார்டு சலுகை பெற்றிருந்த பிரான்ஸ் வீராங்கனை லூயிஸ் பாய்சன் காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு வைல்டு கார்டு என்ட்ரி அளிக்கப்பட்டுள்ளது.
* ஆசிய கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, பரிசு அளிப்பு விழாவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பை பெற இந்திய மறுத்துவிட்டது. இதனால் கோப்பையை அவரே எடுத்து சென்றார். இதுதொடர்பாக பிசிசிஐ புகார் அளித்த நிலையில் நவ.10ம் தேதி துபாயில் நடைபெறும் விழாவில் இந்தியாவிடம் ஆசிய கோப்பை ஒப்படைக்கப்பட உள்ளது.
* ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான கலின்ஸ்காயா, நோஸ்கோவா, எம்போகோ, ரைபகினா, பென்சிக், முச்சோவா, அலெக்ஸாண்ட்ரோவா, கெனின் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் அயோமா, புக்சா ஜோடியும், பெரெஸ், டவுன்சென்ட் ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
