×

2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது ஆஸி.

அடிலெய்டு: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். கில் 7 ரன்னிலும், அடுத்த வந்த கோஹ்லி ரன் ஏதுவும் எடுக்காமலும் வெளியேறியதால், 7 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன் எடுத்து இந்தியா தடுமாறியது. அடுத்த வந்து ஸ்ரேயாஸ் ஐயர், ரோகித்துடன் ஜோடி நிதானமாக ஆடி அணி ஸ்கோரை உயர்த்தினார்.

அவ்வபோது பவுண்டரியும், சிக்கர்களையும் பறக்கவிட்ட இருவரும் அரை சதன் அடித்தனர். சிறப்பாக ஆடிய ரோகித் 73 ரன் (97 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. சிறிது நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் 61 ரன்னில் (77 பந்து, 7 பவுண்டரி) நடையை கட்டினார். தொடர்ந்து, கே.எல்.ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ்குமார் ரெட்டி 8 என அடுத்தடுத்து ஆவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

ஒரு முனையில் சிறப்பாக ஆடிய அக்‌ஷர் பட்டேல் 44 ரன்னில் (41 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஜோடி அதிரடி காட்ட இந்தியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தனர். ஹர்ஷித் ராணா 24 ரன் (18 பந்து, 3 பவுண்டரி), அர்ஷ்தீப் சிங் 13 (14 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர். ஆஸ்திரேலியா பந்து வீச்சில் ஆடம் ஜாம்பா 4, சேவியர் பார்ட்லெட் 3, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் எடுத்தனர்.

265 என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடியது. துவக்க வீரரக்ளாக கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். மார்ஷ் 11 ரன்னிலும், ஹெட் 28 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த மாட் ஷாட் மற்றும் மாட் ரென்ஷா ஆகியோர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ரென்ஷா 30 ரன்னிலும், அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 9 ரன்னிலும் பெவிலியன் திரும்ப, சிறப்பாக ஆடிய மாட் ஷாட் 74 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கூப்பர் கோனொலி, மிட்செல் ஓவன் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

மிச்டெல் ஓவன் 36 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து அவுட்டானார். தொடர்ந்து வந்த சேவியர் பார்ட்லெட் 3 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 4 ரன்னிலும் வெளியேறினார். ஒரு பக்கம் சிறப்பாக ஆடிய கூப்பர் கோனொலி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 61 ரன் (53 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி 46.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரை 2-0 என்று வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

* 2 போட்டியிலும் கோஹ்லி ‘0’
இந்த தொடரில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், நேற்றைய போட்டியில் கண்டிப்பாக கோஹ்லி சிறப்பாக ஆடுவார் என பேசப்பட்டது. ஆனால், நேற்றைய போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமே தந்தார்.

* 17 ஆண்டுகளுக்கு பின் தோல்வி
அடிலெய்டு மைதானத்தில் 2008ம் ஆண்டுக்கு பின் ஆடிய போட்டிகளில் இந்திய அணி இதுவரை தோல்வியடைந்தது இல்லை. இதனால், நேற்றைய போட்டியில் இந்தியா வெற்று பெறும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், பேட்டிங்கில் சொதப்பியதால் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் அடிலெய்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்து உள்ளது.

* ரோகித்தின் 4 சாதனைகள்
* ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் 4 இடங்களில் விவன் ரிச்சர்ட்ஸ், டெஸ்ம்ண்ட் ஹெய்ன்ஸ், குமார் சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகியோர் உள்ளனர்.
* தொடக்க வீரராக அதிக ரன்கள் குவிந்த பட்டியலில் கில்கிறிஸ்ட், கங்குலி சாதனையை முறியடித்து 4வது ரோகித் (9219 ரன்) பிடித்து உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் 15310 ரன்களுடன் உள்ளார்.
* ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கங்குலியை ரோகித் (11,225)முறியடித்து உள்ளார். இந்த பட்டியலில் 18,426 ரன்களுடன் சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.
* இந்த போட்டியில் 2 சிக்சர் அடித்ததன் மூலம் சேனா நாடுகளில் அதிக சிக்சர்கள் (151) விளாசிய முதல் வீரர் என்று பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

Tags : India ,Aussie ,Adelaide ,Australia ,Mitchell Marsh ,Rohit Sharma ,Shubman Gill ,Indian ,Gill… ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி