கோக்ரஜார்: அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் சலகாட்டி நோக்கி செல்லும் வழியில் கோக்ரஜார் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. இதில் சுமார் 3 அடி நீள ரயில் பாதை சேதமடைந்தது.
தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்தனர். சோதனை செய்ததில் குண்டு வெடித்து ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்து இருந்தது கண்டறியப்பட்டது. குண்டு வெடிப்பினால் இரவு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பை நிகழ்த்திய மர்மநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
