×

சபரிமலையில் ஜனாதிபதி முர்மு ஆச்சார விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த டிஎஸ்பி: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் சபரிமலையில் தரிசனம் செய்தார். இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் டிஎஸ்பியான மனோஜ்குமார் ஜனாதிபதி சபரிமலையில் ஆச்சார விதிமுறைகளை மீறியதாக கூறி தன்னுடைய வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஐபிகளுக்காக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதிக்காக ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் சீருடையுடன் 18ம் படி ஏறியது ஆச்சார விதிமீறலாகும். இதை எதிர்த்து சங்கிகளும், காங்கிரசாரும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பினராயி விஜயன் இப்படி செய்திருந்தால் என்னவெல்லாம் பிரச்னை ஏற்பட்டிருக்கும். இவ்வாறு டிஎஸ்பி மனோஜ்குமார் வைத்திருந்த ஸ்டேட்டசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சர்ச்சையானதை தொடர்ந்து உடனடியாக அவர் ஸ்டேட்டசில் இருந்து அதை நீக்கிவிட்டார். இதுகுறித்து உடனடியாக விளக்கம் கேட்டு டிஎஸ்பி மனோஜ்குமாருக்கு பாலக்காடு மாவட்ட எஸ்பி அஜித்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கிடையே டிஎஸ்பி மனோஜ் குமாரை கண்டித்து ஆலத்தூர் டிஎஸ்பி அலுவலகம் முன் நேற்று பாஜவினர் போராட்டம் நடத்தினர்.

Tags : DSP ,WhatsApp ,President ,Murmu ,Sabarimala ,Thiruvananthapuram ,Draupadi Murmu ,Manoj Kumar ,Alathur ,Palakkad district ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...