×

திண்டிவனம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் மாயம்

திண்டிவனம், அக். 24: திண்டிவனம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி உமா (53) இவர்களது இளைய மகள் சுகாசினிக்கு (26) திருமண ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 31ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுகாசினி திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் சுகாசினி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் உமா அக்கம் பக்கம் தேடி உள்ளார். எங்கு தேடியும் சுகாசினி கிடைக்காததால் ஒலக்கூர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணப்பெண் சுகாசினியை தேடி வருகின்றனர்.

Tags : Tindivanam ,Subramani ,Olakkur village ,Villupuram district ,Uma ,Sukasini… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...