மதுரை: முதற்கட்ட விசாரணைக்காக ஒரு நபருக்கு போலீசார் சம்மன் அனுப்ப இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப் பஞ்சாயத்துக்கு சமமாகும் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
