×

கொடைக்கானலில் எரிசாலை அருகே மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அதன் சுற்று வட்டங்களை சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நகர் மற்றும் சாலையோரங்களில் அவ்வப்பொழுது மரங்கள் விழுந்து வருகின்றன

குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அருகே உள்ள கீழ் பூமி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையில் மரம் முறிந்து அருகே இருந்த உயர் மின்னழுத்த கம்பி மற்றும் சாலையில் விழுந்தது. இதனால் 200 கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்க பட்டது. தற்போது பொதுவரை நெடுஞ்சாலை துறை மற்றும் மின்வாரிய துறை எந்த ஒரு நடவடிக்கைகள் எடுக்காததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Erisala ,Kodaikanal ,Dindigul ,Dindigul district ,Godaikanal ,Kodiakanal Star Lake ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு