×

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்

ஈரோடு: ஈரோட்டில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு, வ.உ.சி பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாளை(19ம் தேதி) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியன்று,சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.

இதனை முன்னிட்டு, கோயில் வார வழிபாட்டு குழு சார்பில், ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனுமன் ஜெயந்தியன்று வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 75 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து கோயில் வார வழிபாட்டுக்குழுவினர் கூறியதாவது:

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை காலை 4.30 மணி முதல் இரவு கோயில் நடை சாத்தும் வரை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். இந்த லட்டு தயாரிக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர பக்தர்களுக்கு கையில் கட்டும் ஆரஞ்சு கயிறும்,அன்னதானமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Hanuman Jayanti ,Erode ,Mahaveera Anjaneyar ,VOC Park, Erode ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...