×

தேசிய அளவிலான கார் பந்தயம் கோவை வீரர்கள் வெற்றி

கோவை, டிச.30: கோயமுத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான  21-வது சந்தர் நினைவு கோப்பைக்கான தேசிய கார்பந்தய போட்டி  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வீரர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள்  நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தில் கார்கள் ஒன்றன் பின், ஒன்றாக  விடப்படும். குறிப்பிட்ட தூரத்தை, குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் வீரர்கள்  வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். போட்டி தூரத்தை  நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது  பின்னதாகவோ அடையும் வீரர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள்  வழங்கப்படும். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு உதவியாளர் காரில் இருப்பார்.

கோவை பீளமேடு தனியார் பள்ளியில் இருந்து கார்கள் ஒன்றன் பின்,  ஒன்றாக விடப்பட்டன. இதில் முதலிடத்தை கோவையை சேர்ந்த வீரர்கள்  அப்பு கார்த்திகேயன், டிங்கி வர்கிஸ் பிடித்தனர். 2-வது இடத்தை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் முஸ்தபா பிடித்தனர். பெண்கள் பிரிவில் விஷ்ணு பிரியா, ராஜ்குமார் முதலிடமும், அபிநயா, யுவராஜ் 2-ம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

Tags : car racing ,Coimbatore ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்