×

பைக் விபத்தில் தொழிலாளி பலி

கேடிசி நகர், அக். 23: நெல்லை அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் மகன் பாலகிருஷ்ணன்(37), வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு பாலகிருஷ்ணன், வடுகப்பட்டி -கரிசல்குளம் விலக்கில் பைக்கில் சென்றார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : KTC Nagar ,Nellai ,Balakrishnan ,Sankarapandian ,Seethapalpanallur Main Road ,Alankulam ,Tenkasi district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...