×

சொத்து வரியை கட்டாததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி பறிப்பு..!!

தென்காசி: சொத்து வரியை கட்டாததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் சுதா இவர் பேரூராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராகவும் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான கட்டடங்களுக்கு சொத்துவரியை உரியகாலத்தில் செலுத்தவில்லை என பல ஆண்டுகளாகவே அப்பகுதியின் பேரூராட்சி உறுப்பினர்கள் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என செயல் அலுவலரிடம் 12 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அப்போது சுதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தன்னை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். அப்போதைய நேரத்தில் செயலாளர் பதிவு காலியாக இருந்ததால் வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என பேரூராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வில்லை இதனால் அவரது பதவி அன்றைய தினம் தப்பியது. இந்நிலையில் பேரூராட்சி தலைவர் சொத்துவரி செலுத்தாத காரணத்தால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பல பேரூராட்சி உறுப்பினர்கள் அவரை தொடர்ந்து பேரூராட்சி தலைவருக்கு அழுத்தம் கொடுத்தனர். அதன் காரணமாக அவர் தற்போது அவரது பதவி பறிக்கப்படுவதாக செயல் அலுவலர் வேங்கட கோபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : Tenkasi District ,Alankulam ,Municipal ,President ,Sudha ,TENKASI ,TENKASI DISTRICT ALANGULAM MUNICIPAL GOVERNMENT ,SUDA ,Alankulam District ,Tenkasy District ,7th Ward Councillor ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்