சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள், காவிரி படுகை மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்ல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
