×

பரூக் அப்துல்லா பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். காஷ்மீரத்தின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்பட்டு வருவதற்கு எதிரான காஷ்மீரினது குரலின் அடையாளமாக பரூக் அப்துல்லா போராடி வருகிறார். அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Farooq Abdullah ,Chennai ,Tamil Nadu ,Jammu and Kashmir National Conference ,Jammu and Kashmir National Conference… ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...