×

சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

 

சென்னை: சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Chennai ,Weather Centre ,southern Andaman ,southeastern Bengal Sea ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு...