×

டெல்லிக்கு ‘இந்திரபிரஸ்தா’ என பெயர் மாற்ற வேண்டும்: விசுவ இந்து பரிசத் கோரிக்கை

புதுடெல்லி: விஷ்வ இந்து பரிஷத் டெல்லி செயலாளர் சுரேந்திர குமார் குப்தா டெல்லி கலாச்சார துறை அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தில்,டெல்லியின் பெயரை அதன் பண்டைய கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தும் வகையில் மீண்டும் இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும். டெல்லி என்று சொல்லும்போது 2000 ஆண்டு காலத்தை மட்டுமே நாம் காண்கிறோம்.

இந்திரபிரஸ்தா என்று கூறும்போது 5000 ஆண்டு கால புகழ்பெற்ற வரலாற்றுடன் நாம் இணைகிறோம். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை இந்திரபிரஸ்தா விமான நிலையம் என்றும், டெல்லி ரயில் நிலையத்தை இந்திரபிரஸ்தா ரயில் நிலையம் என்றும், ஷாஜகானாபாத் மேம்பாட்டு வாரியத்தை இந்திரபிரஸ்தா மேம்பாட்டு வாரியம் என்றும் பெயர் மாற்ற வேண்டும்\\” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Indraprastha ,Vishwa Hindu Parishad ,New Delhi ,Surendra Kumar Gupta ,Culture Minister ,Kapil Mishra ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...