×

திமுக ஆட்சி அமைந்ததும் சீவல்சரகு சமத்துவபுரம் சீரமைக்கப்படும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஐ.பெரியசாமி உறுதி

சின்னாளபட்டி, டிச. 29: ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சீவல்சரகு ஊராட்சியில் உள்ள ஆதிலெட்சுமிபுரத்தில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்னும் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ராமன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி.ப.வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ஹேமலதா, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சக்திவேல். கருத்தராஜா, கலாபச்சை, பொருளாளர் போஸ், அவைத்தலைவர் காணிக்கைசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாப்பாத்தி, சாதிக், காங்கேயன்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசியதாவது:ஆத்தூர் தொகுதியில் கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு நலத்திட்டத்தையும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதிப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 கோடியில் ரூ.19 கோடியை 46 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளுக்கு குடிநீர் பிரச்னைக்கு செலவழித்துள்ளேன். இதன் மூலம் குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது. 120 நாட்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் சீவல்சரகு ஊராட்சி சமத்துவபுரம் சீரமைக்கப்பட்டு அழகிய நகரமாக மாற்றப்படும்’ என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கலைச்செல்வி முருகன், மணலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுருளிராஜன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : I. Periyasamy ,meeting ,formation ,Grama Niladhari ,Sivalsaraku Samathuwapura ,DMK ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு...