×

இலுப்பூர் அருகே காரில் கடத்தப்பட்ட 650 கிலோ குட்கா பறிமுதல்

இலுப்பூர், அக்.18: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே காரில் 650 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இலுப்பூர் திருநல்லூர் பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் இரவு இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் கலா, உதவி ஆய்வாளர் பத்மப்ரியா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு கார்களை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் 650 கிலோ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இவை அனைத்தும் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் புகையிலை பொருள்களை கடத்தி வந்தது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாகத் பூரா மகன் சரவணன் சிங் (28), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாச்சிகுறிச்சி பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் அருள்ஜோதி (28) என்பது தெரிய வந்தது.இதையடுத்து இருவரையும் கைது செய்த இலுப்பூர் போலீசார், அவர்களிடமிருந்து 650 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இரண்டு காரை பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரமாகும்.மேலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : Ilupur ,Pudukkottai district ,DSP ,Divya ,Ilupur-Tirunallur ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா