×

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான சதுரங்க போட்டி

பெரம்பலூர்: அக்.18: அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் சார்பில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான சதுரங்க போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர்.எம். சிவசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

போட்டியில், 15க்கும் மேற்பட்ட கல்லூரியை சார்ந்த 140க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் பங்கேற்ற மாணவர்களை இணைத்தலைவர் இன்ஜினியர் எம்.எஸ். விவேகானந்தன், துணை முதல்வர் பா.சரவணன், மற்றும் மண்டலம் 14 இல் உள்ள பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர் பாராட்டினர்.

போட்டியில், சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், கு.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி இரண்டம் இடத்தையும், கு.ராமகிரிஷ்ணன் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பெண்கள் பிரிவில் கு.ராமகிருஷ்ணன் காலேஜ் ஒப்பி டெக்னாலஜி முதல் இடத்தையும் SRM TRP பொறியியல் கல்லூரி இரண்டம் இடத்தையும் கு ராமகிருஷ்ணன் பொறியெயில் கல்லூரி முண்டராம் இடத்தையும் பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர். எம். சிவசுப்பிரமணியன் அவர்கள் நேரில் சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தி, அவர்களின் எதிர்கால சாதனைகளுக்கு உற்சாகம் அளித்தார்.

 

Tags : Sri Ramakrishna Engineering College ,Perambalur ,Anna University Sports Board ,Dr. ,M. Sivasubramaniam ,Sri Ramakrishna Educational Institutions.… ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...