சீர்காழி, அக்.18: சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் அறங்காவல் குழு கூட்டம் அறங்காவல் குழு தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அறங்காவல் குழு தலைவர் கோயில் பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் முருகன் மேலாளர் சிவானந்தம், அறங்காவல் குழு உறுப்பினர்கள் தாண்டவமூர்த்தி, சுந்தரி, நாகபிரகாஷ் ராஜன், நாகராஜன், மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
