- கவர்னர்
- கலைஞர் பல்கலைக்கழகம்
- கும்பகோணம்
- அமைச்சர்
- கோவி
- செழியன்
- சட்டசபை
- ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ வி.சி.
- சந்திரகுமார்
- திமுக
- ஈரோடு
- கலைஞர்
- மேற்படிப்பு
- அரியலூர்
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் (திமுக) பேசுகையில், ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் துவங்க அரசு முன்வருமா? என்றார்.இதற்கு பதில் அளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், ‘அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளடங்கிய கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்டமுன்வடிவு, கடந்த 29-4-2025 அன்று இப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்மீது ஒப்புதல் வேண்டி, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே, உறுப்பினர் ஈரோட்டில் கோரியிருக்கின்ற பல்கலைக்கழகம் குறித்து, முதல்வரோடு கலந்து பேசி, அடுத்தடுத்த நிலையில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்போது வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.
