நியூயார்க்: ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பயப்படுவதாக பதிவு ஒன்றை போட்டார். இந்த பதிவை பகிர்ந்துள்ள அமெரிக்க நடிகையும், பாடகியுமான மேரி மில்பென், ராகுல் சொல்வது தவறு எனக் கூறியுள்ளதோடு, ராகுலை விமர்சித்து ஒரு பதிவையும் போட்டுள்ளார். அதில்,’ ராகுல் காந்தி, நீங்கள் சொல்வது தவறு. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பயப்படவில்லை. பிரதமர் மோடி நீண்ட விளையாட்டை புரிந்துகொள்கிறார், மேலும், அமெரிக்கா உடனான அவரது ராஜதந்திரம் மூலோபாயமானது. டிரம்ப் அமெரிக்காவின் நலன்களை எப்போதும் முதன்மையாக கருதுவதுபோல், பிரதமர் மோடியும் இந்தியாவிற்கு சிறந்ததையே செய்வார். இந்தியாவின் பிரதமர் ஆகும் அளவிற்கு உங்களிடம் புத்திசாலித்தனம் இல்லை. நீங்கள் உங்கள் ‘நான் இந்தியாவை வெறுக்கிறேன்’ சுற்றுப்பயணத்திற்கு திரும்புவது நல்லது. அங்கு ஒரு பார்வையாளர் மட்டுமே இருக்கிறார், அது நீங்கள் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
