- நெல்லை, தென்காசி மாவட்ட வேளாண்மைத் துறை கூட்டுறவு கடன் சங்கம்
- நெல்லை
- நெல்லை, தென்காசி மாவட்ட வேளாண்மைத் துறை ஊழியர்கள் கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் சங்கம்
நெல்லை, அக்.18: நெல்லை, தென்காசி மாவட்ட வேளாண்மைத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் 1988ல் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வரும் இச்சங்கம் உறுப்பினர்களுக்கு பங்குத்தொகையாக டிவிடெண்ட் 12 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. 214 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கமானது பங்குத்தொகையாக ரூ.70.68 லட்சமும், உறுப்பினர்களின் சிக்கன நிதியாக ரூ.78.97 லட்சமும் உள்ளது. உறுப்பினர்களுக்கு மத்திய கால கடனாக நெல்லை,தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை துறை பணியாளர்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதன் உறுப்பினர்களுக்கு மத்திய கால கடனாக ரூ.8.10 கோடிக்கு கடன்களை வழங்கி சாதனை படைத்துள்ளது. இச்சங்கத்தின் செயலாட்சியர் கூட்டுறவு சார்பதிவாளர் விஜயன், சங்க செயலர் துர்க்கா பரமேஸ்வரன் ஆகியோரின் நிர்வாகத்தால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகவலை நெல்லை மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் வின்சென்ட் தெரிவித்தார்.
