×

தீபாவளி பண்டிகை: ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!

 

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் தேசிய விடுமுறை நாள் என்பதால், சென்னையில் 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Diwali Festival ,Chennai ,Diwali ,Southern Railway ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...