×

ஏரலில் காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா

ஏரல், டிச. 29:  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைபடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136வது துவக்க விழா மற்றும் பேரணி ஏரலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் வை. மேற்கு நல்லகண்ணு,  ஆழ்வை மேற்கு கோதண்டராமன், கருங்குளம் புங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏரல் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ஏரல் பாக்கர் அலி, பெருங்குளம் மூக்காண்டி, வைகுண்டம் சித்திரை, ஆழ்வை சதீஷ்குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, பொதுச் செயலாளர் இசைசங்கர், மாவட்ட தொழிலாளர் யூனியன் தெற்கு மாவட்ட தலைவர் சிவராஜ் மோகன், ஒன்றிய கவுன்சிலர் பாரத், மாவட்ட ஊடகபிரிவு தலைவர் முத்துமணி, வை. ஊடக பிரிவு தலைவர் மரியராஜ் மற்றும் நிர்வாகிகள் சிவகளை பிச்சையா, அந்தோணிகாந்தி, காமராஜ் காந்தி, காங்கிரஸ் எடிசன், ஏரல் பிஸ்மிசுல்தான், குமரேசன், வக்கீல் சித்தாரத், மதி சேகரன், சந்தனகுமார், குமரேசன் பங்கேற்றனர்.

Tags : Congress Party Annual Ceremony ,Earl ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா