×

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

ஜெயங்கொண்டம் அக்.17: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் கந்தசாமி மகன் வடிவேலு (45). இவர் ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூருக்கு சென்று தங்கி விட்டு 13-ம் தேதி அன்று புறப்பட்டு ஜெயங்கொண்டம் பேருந்தில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி காட்டுமன்னார்குடி பேருந்தில் ஏறும்போது பேருந்தில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வடிவேலு சட்டை பையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக இறங்கி அப்பகுதியில் நின்ற ஒரு காரில் ஏறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வடிவேலு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

 

Tags : Jayankondam ,Kandasamy ,Vadivelu ,Vadakkuttu ,Kurinjipadi ,Cuddalore district ,Keelappazhuvur ,Ariyalur district ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது