×

உடையார்பாளையம் காவல் நிலையத்தில் காவல்துறையினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

ஜெயங்கொண்டம் அக்.17: உடையார்பாளையம் காவல் நிலையத்தில் காவல்துறையினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சக்கரவர்த்தி தலைமையில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி மற்றும் விக்கிரமங்கலம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு கண் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

 

Tags : Udayarpalayam police station ,Jayankondam ,Ariyalur ,District ,Superintendent ,Police Vishwesh ,Pa. ,Shastri ,Sub-Divisional Police ,Kumbakonam… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...