×

மல்லிப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் கைது

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த த முரளி (30), திருமயத்தை சேர்ந்த ராஜா (53), ராமநாதபுரத்தை சேர்ந்த குமார் (32) ஆகிய 3 மீனவர்களும் நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க சென்றனர். நாட்டுப்படகின் இன்ஜின் பழுதானதால் திசைமாறி இலங்கை கடல் எல்லைப்பகுதியான அனலைத்தீவு பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மூன்று மீனவர்களையும் எல்லையை தாண்டி வந்ததாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Mallipattinam ,Murali ,Thanjavur district ,Raja ,Thirumayat ,Kumar ,Ramanathapuram ,Lankan ,Analaitivu… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...