×

வடகிழக்கு பருவமழை பணிகளை ஆய்வு செய்ய 7 தலைமை பொறியாளர்கள் நியமனம்: நெடுஞ்சாலை துறை அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அரசாணை: தமிழ்நாட்டில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, வெள்ள நிலைமையை சமாளிக்க 10 நெடுஞ்சாலை வட்டங்களில் உள்ள சாலை மற்றும் பாலங்களை திறம்பட கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தலைமைப் பொறியாளர் நிலையில், 7 தலைமைப் பொறியாளர்கள் வெள்ள கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ், விழுப்புரம் வட்டத்திற்கு பன்னீர்செல்வம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் கிருஷ்ணசாமி, மதுரை வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் சரவணன், திருநெல்வேலி வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், திருவண்ணாமலை மற்றும் சேலம் வட்டத்திற்கு தேவராஜ், திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் வட்டத்திற்கு செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Northeast Monsoon ,Highways Department ,Chennai ,Tamil Nadu Highways Department ,Tamil Nadu ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...